சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வீட்லயே எப்படி சுகர் வேக்ஸ் செய்வது...

 

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வீட்லயே எப்படி சுகர் வேக்ஸ் செய்வது...



பெண்களே உங்க உதட்டுக்கு மேல், தாடை பகுதியில், கை மற்றும் கால்களில் அதிகமாக தேவையில்லாத முடிகள் இருக்கின்றனவா. அதை எளிய முறையில் நீக்க இந்த சுகர் வேக்ஸ் பயன்படுகிறது. இனி முடிகளை நீக்க நீங்கள் கடைகளில் வேக்ஸ் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த இயற்கையான சுகர் வேக்ஸ்யை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.


பொதுவாக பெண்கள் வெளி உலகில் சந்திக்கும் பெரிய பிரச்சினை இந்த தேவையற்ற முடிகள் தான். ஆண்களைப் போல உதடுக்கு மேலே வளரும் முடிகளாக இருக்கட்டும், தாடையில் வளரும் முடிகளாக இருக்கட்டும் இந்த தேவையற்ற முடிகளால் அவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். பெண்கள் என்ன தான் பல டிப்ஸ்களை பின்பற்றியும் இந்த தேவையற்ற பூனை மயிர்களின் தொல்லை விட்ட பாடில்லை. அதனால் என்னவோ நிறைய பெண்கள் லேசர் சிகிச்சை போன்றவற்றை நாடிச் செல்கின்றனர்.

​தேவையற்ற முடி

நிறைய பெண்களின் வருத்தம் இதற்கு இயற்கையிலேயே தீர்வு இல்லையா என்பது தான். உண்மையில் இந்த தேவையற்ற முடிகளை நீக்க இயற்கையிலேயே ஒரு எளிமையான முறை உள்ளது. அது தான் சுகர் வேக்ஸ் என்பது. நீங்கள் செயற்கையாக ஷாப்களில் கிடைக்கும் வேக்ஸ்யை கொண்டு முடிகளை நீக்கும் போது அதனால் பக்க விளைவுகள் மற்றும் சரும பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கும் வேக்ஸ் முற்றிலும் பாதுகாப்பானது. உங்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள்.

சரி வாங்க தேவையற்ற முடிகளை நீக்கும் இந்த சுகர் வேக்ஸ்யை எப்படி வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம் என அறிவோம்.

சுகர் வேக்ஸ்

இந்த சுகர் வேக்ஸ் செய்ய வெறும் எலுமிச்சை பழம், சர்க்கரை, தேன் மற்றும் தண்ணீர் இருந்தால் போதும். இந்த சுகர் வேக்ஸ்யை கொண்டு முகத்தில் உள்ள முடிகள் மட்டுமல்ல கை மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளைக் கூட நீங்கள் நீக்க முடியும். இந்த பொருட்களை நீங்கள் ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் பசை போன்ற தன்மை உங்க தேவையற்ற முடிகளை நீக்க உதவி செய்யும். மேலும் இந்த வேக்ஸ்யை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது தேவையற்ற முடிகளின் வளர்ச்சியும் காலப்போக்கில் குறைந்து விடுகிறது.மேலும் இந்த சுகர் வேக்ஸ் மூலம் வலியில்லாமல் முடிகளை ரிமூவ் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
  • 3/4 கிளாஸ் தண்ணீர்
  • 1 டேபிள் ஸ்பூன் தேன்
  • சுகர் வேக்ஸ் செய்முறை

    ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டுள்ள சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். அதில் சர்க்கரை முழுமையாக கரைய வேண்டும். சர்க்கரை முழுமையாக கரைந்து கொதிக்கின்ற நிலையில் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு நன்றாக கிளறி விடவும். இறுதியில் நன்றாக கெட்டியாக பிசின் போன்ற பதத்தில் வர வேண்டும். அதுவரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் நன்றாக கெட்டி பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது நீங்கள் பயன்படுத்த சுகர் வேக்ஸ் தயாராகி விட்டது.

  • பயன்படுத்தும் முறை

    வேக்ஸ் செய்வதற்கு முன்பு அந்த பகுதியை எந்த அழுக்கும் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    இப்பொழுது உங்க சருமத்தில் பவுடரை அப்ளே செய்து கொள்ளுங்கள். பவுடர் அந்த பகுதியில் மீதமுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் எளிதாக வேக்ஸ் செய்ய முடியும்.

    இப்பொழுது சுகர் வேக்ஸ்யை எடுத்து முடிகள் வளர்ந்த திசையில் அப்ளே செய்து பிறகு அதற்கு எதிர்திசையில் பிடித்து இழுங்கள்.

    தேவையற்ற முடிகள் நீங்குவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

    குறிப்பு

    முகம் போன்ற இடத்தில் வேக்ஸ் அப்ளே செய்வதற்கு முன்பு அதிக சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    அதே மாதிரி உதடுகளில் அப்ளே செய்யும் போது கண் மற்றும் வாயில் படாமல் அப்ளே செய்யுங்கள்.

    
                🙏🙏🙏 Thank you  🙏🙏🙏



Comments