8 போட போகும்போது இந்த 10 விஷயங்களை கவனத்துல வச்சுக்கோங்க... ஃபெயில் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!
8 போட போகும்போது இந்த 10 விஷயங்களை கவனத்துல வச்சுக்கோங்க... ஃபெயில் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!
18 வயது நிரம்பிய இளைஞர்கள் ஓட்டு போடுவதற்கு தயாராகின்றார்களோ, இல்லையோ வாகனங்களை ஓட்டுவதற்கும், அதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கும் தயாராகி விடுகின்றார். சொல்லப் போனால் 18 வயது தொடங்குவதற்கு முன்னரே (சிறுவர்களாக இருக்கும்போதே) வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர்.
இந்த எண்ணம் பெரும்பாலான ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களை கலங்கச் செய்துவிடுகின்றது. வழக்கமான நேரங்களில் 8 முதல் 7 1/2 (பிறருக்கு) வரை போட்டு காட்டும் இளைஞர்கள், வாகன உரிமத்திற்காக சோதனையை (பரீட்சையை) மேற்கொள்ளும் சில செயல்களைச் செய்ய தவறி விடுகின்றனர்.
அவை என்ன?, ஆர்டிஓ அதிகாரி முன்னிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?, எந்த மாதிரியான தவறுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்?, என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க
பதற்றத்துடன் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டாம். இது உங்களை மேலும் தவறுகளை மேற்கொள்ள வழி வகுக்கும். அதாவது, இது ப்ளஸ்2 பொது தேர்வு அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், அதிக நம்பிக்கையுடன் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்.
இதுமட்டுமின்றி, எடுத்த எடுப்பிலேயே அதிக வேகத்தில் இயக்கி உங்களின் திறன்களை வெளிக்காட்ட வேண்டாம். மிகப் பொறுமையான மற்றும் ஸ்மூத்தான ஆரம்பத்தை மேற்கொள்ளவும். ஆனால், நீங்கள் குழப்பத்துடனும், பயத்துடன் இருக்கும்போது உங்களை அறியாமலே சில தவறுகளை செய்யக்கூடும். ஆகையால்தான் அச்சம் மற்றும் பதற்றத்தைத் தவிர்ப்பது மிக சிறந்தது.
அடிப்படை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்
ஓட்டுநர் உரிமத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் முன்பு அடிப்படை விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். இது பெரிய தவறுகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும். அதேசமயம், சோதனையை மேற்கொள்ளும்போது எல்லாம் எனக்கு தெரியும் என அதிக நம்பிக்கை அல்லது நம்பிக்கையே இல்லாத மன நிலையில் இருக்க வேண்டாம். இது நம்மை தோல்வியை நோக்கி நகர்த்துமாம்.
சோதனை மேற்கொள்வதற்கு முன்னர் கண்ணாடிகளை பார்ப்பது, ஹேண்ட் பிரேக்கை செக் செய்வது, இன்டிகேட்டரைப் பயன்படுத்துவது என சில அடிப்படை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், வாகனத்தை நகர்த்துவதற்கு முன்னர் சுற்றிலும் ஒரு முறை பார்த்த பின்னர் நகர்த்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பயிற்சி
ஆர்டிஓ சோதனை மேற்கொள்வதற்கு முன்னர் சில முறை பயிற்சியை நீங்களாகவே மேற்கொள்வது நல்லது. இது உடனடியாக தேர்ச்சியைப் பெற வழி வகுக்கும். அதாவது 8 போடுவது, வளைவுகளில் திருப்புவது, சாய்வான பகுதிகளில் வாகனத்தை இயக்குவது என பல கட்ட பயிற்சிகளை முன்கூட்டியே செய்து தயாராவது பரிசோதனையின்போது நல்ல பலனை பெற உதவும்.
சீட் பெல்ட்
கார் ஓட்டுநர் உரிமத்திற்கான பரிசோதனையை மேற்கொள்ளும்போது சீட் பெல்டை முதலில் அணிந்து விடுங்கள். காருக்குள் நுழைந்த உடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இதுவே ஆகும். இதன் பின்னர் அனைத்து பரிசோதனையையும் எதிர்கொள்ளுங்கள்.
இதை மட்டும் மறந்துடாதீங்க
உங்கள் சொந்த காரை பரிசோதனை மேற்கொள்ள எடுத்து போறீங்கனா, உங்க கார்ல 'எல்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள். இதுமட்டுமின்றி, மேலும் பார்க்கிங் செய்யும்போதும், காரை திருப்பும்போதும் அதற்கான இன்டிகேட்டர்களை ஒளிர விடுங்கள். இவையனைத்தும் ஆர்டிஓ அதிகாரிகளால் கண்கானிக்கப்படும் என்பதை தப்பி தவறியும் மறந்துவிடாதீர்கள்.
நேரம் தவறாமை
உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே சென்றுவிடுங்கள். சில ஆர்டிஓ அதிகாரிகள் உரிய நேரத்தில் வரவில்லை என்றால் நீங்கள் அன்றைய தினம் வரவில்லை என கூறி உங்களின் விண்ணப்பத்தை வேறு தேதிக்கு மாற்றிவிடுவார். இது இன்னும் சில நாட்கள் உங்களை காத்திருக்க வைக்கும்.
தொடர்ந்து, முன்கூட்டியே சென்று அனைத்து ஆவணங்களையும் ஒரு முறை சரிபார்த்துவிடுங்கள். பின்னர் கடைசி நேரத்தில் இது இல்லை, அது அல்லை என தலை தடவிக் கொண்டு நிற்காமல் இருக்க உதவும். தொடர்ந்து, பிற விண்ணப்பதாரர்களுடன் பேசி இன்னும் சில டிப்ஸ்களைப் பெறுவதற்கு முன்கூட்டியே சென்றால் மட்டுமே முடியும்.
இன்டிகேட்டர்கள்
முன்னரே கூறியதைப் போல் எந்தவொரு அசைவுகளுக்கும் இன்டிகேட்டர் செய்வதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக, ஆர்டிஓ அதிகாரி உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அப்படி போ, இப்படி போ என கூறுவார். அந்த நேரத்தில் இன்டிகேட்டர் போட்ட பின்னரே திரும்ப வேண்டும். இது மிக முக்கியமான பல பரீட்சை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிலர் இது செய்ய தவறியதற்காக ஃபெயில் ஆகிய சம்பவங்கள் நம்ம ஊரில் அரங்கேறியிருக்கின்றன. மேலும், நீங்கள் யு-டர்ன் எடுக்க இருக்கின்றீர்கள் என்றால் உங்களது கைகளால் பிற வாகன ஓட்டிகளுக்கு சைகை காட்ட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்
ரிவர்ஸ் எடுப்பதற்கு நன்கு பழகுங்கள்
டிரைவிங் டெஸ்டின்போது ரிவர்ஸ் எடுப்பதையும் ஓர் சோதனையாக ஆர்டிஓ அதிகாரிகள் மேற்கொள்வர். அந்த நேரத்தில் எஞ்ஜினை ஆஃப் செய்யாமல் ரிவர்ஸ் கியருக்கு மாற்றி ரிவர்ஸ் எடுக்க வேண்டும். அதுவும், குறுக்கு வழியில் ரிவர்ஸ் கியருக்கு வரக் கூடாது என்பது விதி. முறையான வழியில் ரிவர்ஸ் பாயிண்டிற்கு கியரைக் கொண்டு வர வேண்டும்.
9 மற்றும் 3 நினைவில் கொள்ளுங்கள்
ஓட்டுநர் பயிற்சியை மேற்கொள்ளும்போது உங்கள் இரு கைகளுக்கும் வேலைக் கொடுங்கள். இரு கைகளையும் ஸ்டியரிங் வீலில் வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது மட்டும் ஓர் கையை ஸ்டியரிங் வீலிலும், மற்றொரு கையை கியரிலும் மாற்றிக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் 9 மணி மற்றும் 3 மணியை குறிக்கும் வகையில் உங்களது கையை ஸ்டியரிங் வீலில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக பிடிமானத்தை வழங்க உதவும்.
பொறுமையான ஆக்சலரேஷன்
ஆக்சலரேஷனை கையாளும்போது மிக பொறுமையாக கையாளுங்கள். நான் நன்கு தேர்ச்சி பெற்றவன் என நினைத்துக் கொண்டு ஆக்சலரேஷனில் உங்களது விளையாட்டைக் காட்ட வேண்டாம்.
மேலே கூறப்பட்ட 10 வழிமுறைகளை நீங்கள் கடைபிடித்தாலே ஓட்டுநர் உரிம பரிசோதனையில் நீங்கள் பாஸாவது நிச்சயம். முதல் முயற்சியிலேயே இது நடைபெறும் என்றால் பாருங்களேன். கவனத்தில் கொள்ளுங்கள் எந்தவொரு பதற்றமும், அவசரமும் இன்றி பரீட்சைகளை எதிர் கொண்டால் நிச்சயம் நல்ல மதிப்பெண்ணை நம்மால் பெற முடியும்.
🙏🙏🙏 Thank you 🙏🙏🙏
Comments
Post a Comment