உடலுறவு கொள்வதற்குமுன் நீங்கள் எப்போதும் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன...

 

உடலுறவு கொள்வதற்குமுன் நீங்கள் எப்போதும் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன...


பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன் ஒரு சிலருக்கு பதட்டங்கள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்களுடைய பார்ட்னரை அவர்களால் திருப்திப்படுத்த முடியுமா என்ற அச்சமே என்பதே ஆகும். நீங்கள் பாலியல் உடலுறவுக்கு செல்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் பற்றி உங்களுக்கு இந்த கட்டுரை விளக்குகிறது





புது உறவு ஒன்றில் நாம் இணையும் போதெல்லாம் நமது பார்ட்னருடன் உடல் ரீதியாகவும் அன்பை எதிர்பார்ப்பது இயற்கை. இது உற்சாகத்தையும் ,ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு பந்தம் ஆகும். ஆனால் ஒரு சிலருக்கு பதட்டம் மற்றும் கவலையும் ஏற்படுகிறது. உடலுறவின்போது உங்களது பார்ட்னர் எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை பற்றி கவலை கொள்ள நேரிடுகிறது. உங்கள் மனதில் அவரை திருப்திப்படுத்த முடியுமா? இல்லையா? அல்லது பார்ட்னர் என்ன எதிர்பார்க்கக் கூடும் போன்ற பல கேள்விகள் உங்களில் எழலாம். இவை அனைத்துமே உடலுறவு கொள்ளும்போது ஒருவருக்கு ஏற்படும் கேள்விகளாகும். இந்த விஷயங்களை எல்லாம் யோசிப்பதற்கு முன் நீங்கள் செய்யவேண்டிய ஏழு விஷயங்கள் உண்டு. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்வோம்

​குறிப்புகள்

நீங்கள் உடலுறவு கொள்வதற்கு முன் சின்னச்சின்ன சீண்டல்கள் உங்கள் உடலுறவை மகிழ்ச்சியாக்கும். படுக்கைக்கு செல்வதற்கு முன் நீண்ட நேர முத்தம், இதைப் பற்றிய உரையாடல்கள், கண் சிமிட்டுதல் போன்ற சின்ன சின்ன சில்மிஷங்கள் போன்றவை உங்கள் உடலுறவை எளிமையாக்கும். இது உங்களை பதட்டமில்லாமல், உடலுறவு எண்ணங்களை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.


ஆணுறை

பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை உடலுறவுகொள்ள செல்வதற்கு முன் ஆணுறைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ரொமான்டிக்கான மாலையின் போது இது போன்ற முக்கிய பொருட்கள் இல்லையென்றால் உங்களுக்கு பதட்டம் இன்னும் அதிகரிக்கலாம். ஒரு நல்ல தருணத்தில் வெளியில் சென்று அலைவதை விட முன்கூட்டியே இது போன்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவது உங்கள் உறவில் எந்த இடையூறுமின்றி இருக்கும்.


மனநிலை

இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்தந்த சூழ்நிலைக்கான சிந்தனைகள் மற்றும் சைகைகள், தொடுதல் போன்றவை உங்களது இரவு நேர உடலுறவை இன்பமாக உதவுகின்றன. இந்த மனநிலைக்கு உங்களை கொண்டுவர, உங்கள் பார்ட்னருக்கு பிடித்த கேண்டில் லைட் டின்னர், வீடு முழுவதும் நறுமணங்கள் வீசுமாறு செய்வது போன்றவற்றை செய்யலாம். இவை உங்களின் செக்ஸ் மனநிலையை மேம்படுத்த உதவும்.


புலன்களை தூண்ட

பாலியல் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, பாலியல் சம்பந்தமானதை பற்றி படியுங்கள். மேலும் பாலியல் ரீதியான விஷயங்களை பற்றி கற்பனை செய்து பாருங்கள். இது நமது புலன்களை தூண்டுவதற்கு உதவுகிறது. உடலுறவு கொள்ளும் நாட்களில் இது போன்ற சிந்தனைகளை நீங்கள் செய்து பார்க்கலாம்.

என்ன செய்ய வேண்டும்

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். நீங்கள் விரும்பும் விஷயங்களை அந்த பட்டியலில் சேருங்கள். நீங்கள் எப்படி உடலுறவு கொள்ள போகிறீர்கள் என்று உங்களுக்கு ஒரு யோசனை இருந்தால், அது உங்களது தருணத்தை இன்னும் அதிகமாக அனுபவிக்க வாய்ப்பளிக்கும்.


கவர்ச்சியாக உணர

உங்கள் பார்ட்னர் உடன் இன்பமாக பாலியல் உறவு கொள்வதற்கு கவர்ச்சியாகவும், அவர்கள் விரும்பும் படியாகவும் உணர வைப்பது மிகவும் முக்கியம். உடலுறவு கொள்வதற்கு முன் நீங்கள் கவர்ச்சியாக இருக்கும்படியான ஏதேனும் ஒரு செயலை செய்யுங்கள். குறிப்பாக உங்களது ஆடை போன்றவை இதில் அடங்கும். உங்கள் பார்ட்னரை ஈர்க்கும் இதுபோன்ற விஷயங்கள் உங்கள் உடலுறவை இன்பமாக்கும்.


கவர்ச்சியாக உணர

உங்கள் பார்ட்னர் உடன் இன்பமாக பாலியல் உறவு கொள்வதற்கு கவர்ச்சியாகவும், அவர்கள் விரும்பும் படியாகவும் உணர வைப்பது மிகவும் முக்கியம். உடலுறவு கொள்வதற்கு முன் நீங்கள் கவர்ச்சியாக இருக்கும்படியான ஏதேனும் ஒரு செயலை செய்யுங்கள். குறிப்பாக உங்களது ஆடை போன்றவை இதில் அடங்கும். உங்கள் பார்ட்னரை ஈர்க்கும் இதுபோன்ற விஷயங்கள் உங்கள் உடலுறவை இன்பமாக்கும்.



                  🙏🙏🙏 Thank you 🙏🙏🙏




Comments